சைக்கிளில் சென்ற சிறுமியிடம் சில்மிஷம்… பைக்கில் 3 கி.மீ. துரத்திச் சென்ற தந்தை ; இறுதியில் நடந்த டுவிஸ்ட்!!

Author: Babu Lakshmanan
6 February 2023, 10:28 am

ராணிப்பேட்டை : நண்பனின் வீட்டிற்கு விலாசம் கேட்பது போல் நடித்து சைக்கிளில் பேனா வாங்க சென்ற 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை, பெற்றோர் பைக்கில் துரத்திய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை தென்கடப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த இளைஞர் மணிகண்டன். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளமுள்ளு வாடி கிராமத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வழியில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, பேனா வாங்குவதற்காக கடைக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

ஏரிக்கரை ஓரமாக உள்ள சாலையில் சிறுமி சைக்கிளில் வருவதை கண்ட மணிகண்டன், அவரை நிறுத்தி தனது நண்பனின் வீட்டிற்கு செல்ல விலாசம் கேட்டுள்ளார். சிறுமி சைக்கிளை நிறுத்தி விட்டு கீழே இறங்கி விலாசம் கூறுகையில், திடீரென மணிகண்டன், சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி கூச்சலிட்டதால் இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்ற போது அந்த வாகனத்தில் பதிவு எண்ணை சிறுமி குறித்து வைத்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள், இளைஞர் மீது புகார் கொடுக்க வந்த போது சாலையில் அதே வாகனத்தை கண்டதால் அந்த வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தும்படி கூறியபோது, இளைஞர் அவர்களை கண்டதும் மின்னல் வேகத்தில் வாகனத்தை ஓட்டியுள்ளார்.

விடாமல் பெற்றோர்களும் அதிவேகமாக சுமார் 3 கிமீ தூரம் துரத்தி சென்ற நிலையில், அந்த இளைஞர் லாவகமாக தப்பி சென்றுள்ளார். இதனை வீடியோ பதிவு செய்து சிறுமியின் பெற்றோர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் மனு அளித்த நிலையில், இருசக்கர வாகனத்தின் பதிவு எண் உதவியோடு மணிகண்டனை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 798

    0

    0