31 நாட்களில் 133 படுகொலைகள்… தமிழகத்துக்கு இப்படி ஒரு சூழலா? சீமான் வேதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2024, 2:59 pm

பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். இதன்பின், பேசிய சீமான் கூறியதாவது: இப்படி ஒரு சூழல் வரும்என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது.

சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது?இவ்வாறு அவர் கூறினார்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!