காதலனைத் தேடி சென்னை டூ தஞ்சை வந்த சிறுமி.. 3 நாட்கள் பூட்டி வைத்து வன்கொடுமை.. காதலன் எங்கே?

Author: Hariharasudhan
18 February 2025, 1:30 pm

காதலனைத் தேடி சென்னையில் இருந்து தஞ்சை வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின்பேரில் நின்று கொண்டிருந்த 24 வயது இளைஞர் மற்றும் 14 வயது சிறுமியைப் பிடித்து விசாரித்துள்ளனர். இதில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

எனவே, அவர்கள் இருவரையும் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், இது தொடர்பாக போலீசார் விசாரித்தபோது, தஞ்சை மாவட்டம், திருவோணம் அடுத்த சின்னக்கோட்டைகாடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (24).

இவர் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமியுடன் ஜெகதீஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்தச் சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், ஜெகதீஸ்வரன் சென்னையிலிருந்து தனது ஊருக்கு வந்துள்ளார்.

Chennai girl sexually assaulted in Thanjavur

பின்னர் அந்த சிறுமி, ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்தபோது, தஞ்சைக்கு வரச் சொல்லியுள்ளார். இதனால், வீட்டில் இருந்த பணத்துடன், கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி சிறுமி தஞ்சாவூருக்கு புறப்பட்டுள்ளார். மேலும், இதனை ஜெகதீஸ்வரனுக்கும் தெரிவித்துள்ளார். அப்போது, ஜெகதீஸ்வரன், இப்போது பேசிக்கொண்டு இருக்கும் சிம்கார்டை கழற்றிவிட்டு, வேறு ஒரு சிம்மில் இருந்து பேசு என சிறுமியிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, தஞ்சை வந்த சிறுமி, ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்தபோது, அவர் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அழுது கொண்டே தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது, இதனைக் கவனித்த ஒருவர், அந்தச் சிறுமியை அணுகியபோது, தன்னைப் பற்றிய விவரங்களை சிறுமி அந்த நபரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அந்த நபர், என் வீட்டிற்கு வா, பின்னர் உன் காதலனுடன் உன்னைச் சேர்த்து வைக்கிறேன் எனக்கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன்பேரில், சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து, மூன்று நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் சென்னைக்கு பேருந்தில் ஏற்றி விடுவதற்காக புதிய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: சத்தியமா உன்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. எஸ்கேப்பான மாணவர்.. தி.மலையில் அதிர்ச்சி!

இவ்வாறு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர், தஞ்சை அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (30) என்பதும், ஓட்டுநரான இவரது வீட்டில் மனைவி இல்லாத நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்துள்ளது.

எனவே, இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார், புவனேஸ்வரனைக் கைது செய்தது மட்டுமின்றி, சிறுமியின் காதலனான ஜெகதீஸ்வரனையும் போலீசார் கைது செய்தனர். மேலும், சிறுமி பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!
  • Leave a Reply