முகநூலில் பழகி 14 வயது சிறுமி கடத்தல்.. 2 வருடமாக நாடோடி வாழ்க்கை : பெண் குழந்தை பெற்றெடுத்த கொடுமை.. கேடி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2022, 12:37 pm

தருமபுரி : சமூக வளைதளம் மூலம் 14 வயது பள்ளி மாணவியை காதலித்து கடத்தி இரண்டாவது திருமணம் செய்து குழந்தை பெற்று 2 ஆண்டுகளாக தலைமறைவான இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த நரசிம்மன் (வயது 25), இவர் கர்நாடக மாநிலம் பொம்மனஹள்ளியில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கிருந்து தருமபுரி அடுத்த பழைய தருமபுரி பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வளைதளம் மூலம் காதலித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் கடத்தி சென்றுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் நரசிம்மனை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் காவல் துறையினரிடம் சிக்காமல் அவருடைய இருசக்கர வாகனத்திலேயே கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாரஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மாணவியை அழைத்து சென்றுள்ளார்.

நரசிம்மனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அதனை மறைத்து ஆசை வார்த்தைகள் கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்த நிலையில் மாணவி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மேலும் காவல் துறையினர் தன்னை தேடுவதை அறிந்து நிரந்தரமாக எங்கும் தங்காமல் அடிக்கடி இடமாற்றாம் செய்து கொண்டு தான் தங்கிய இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டும், திருடிய பொருட்களை விற்றும் உல்லாசமாக இருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி தருமபுரி காவல் துறையினர் தெலுங்கானாவில் வைத்து நரசிம்மனை கைது செய்தனர். அவரிடம் இருந்து பள்ளி மாணவியையும் குழந்தையையும் பத்திரமாக மீட்டு மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவையடுத்து பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் நரசிம்மனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1627

    0

    0