14 வயது சிறுமியை கேலி செய்த போதை இளைஞர்.. தட்டிக் கேட்ட தந்தைக்கு காத்திருந்த ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2024, 1:56 pm

14 வயது மகளை கேலி கிண்டல் செய்தவரை தட்டிக் கேட்ட தந்தைக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் பொப்பன் என்ற சின்னராஜ் (48).

இவரது மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான ராஜபெருமாள் மகன் முருகன் என்ற சண்முகம் (21) என்பவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து முருகன் தன்னை கிண்டல் செய்வதாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி அவரது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்

இதையும் படியுங்க: தமிழ்நாட்டில் 3வது மூன்றெழுத்து முதலமைச்சர்.. த.வெ.க மாநாட்டிற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்..!!

அவரது பாட்டி ஒப்பனிடம் தெரிவிக்கவே அவர் நேற்று மாலை வீராணம்பட்டி விலக்கு சாலையில் உள்ள தேநீர் கடை அருகே முருகனை அழைத்து தனது மகளை கிண்டல் செய்யக்கூடாது என்று கண்டித்துள்ளார்.

அப்போது முருகன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொப்பன் கண்டிக்கும் பொழுது அவருக்கும் முருகனுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டிற்கு சென்று கத்தி எடுத்து வந்து பொப்பனை வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பொப்பனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே பொப்பன் உயிரிழந்து விட்டதாக கூறியதால் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலைக்கு முக்கிய காரணம் அப்பகுதியில் அதிகளவில் கஞ்சா மற்றும் மது பொருட்கள் புலங்குவதே காரணம் எனப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என அப்போது மக்கள் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!