லாரி மோதி 15 ஆடுகள் உயிரிழப்பு : சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்…!!
Author: kavin kumar25 January 2022, 2:44 pm
கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்றபோது ஆடுகள் மீது லாரி மோதிய விபத்தில் 15 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
நாகப்பட்டினம் மாவட்டம், இடையத்தான்குடி பகுதியை சேர்ந்த குமார் என்பவர் மந்தை செம்மறி ஆடுகளை மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று உளுந்தூர்பேட்டை அருகே அதையூருக்கு ஆடுகளை மோய்ச்சலுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது செம்பியமாதேவி பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற மந்தை செம்மறி ஆடுகள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 15 செம்மறி ஆடுகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் இந்த விபத்தில் 7 ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எலவனாசூர்கோட்டை போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரியும், இறந்துபோன மந்தை செம்மறி ஆடுகளையும் கைப்பற்றி காவல் நிலையம் எடுத்து சென்றனர். மேலும் படுகாயம் அடைந்த ஆடுகளை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநர் மஸ்தான் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஆட்டின் உரிமையாளருக்கு சுமார் 2 லட்சத்துக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.