ரியல் எஸ்டேட் அதிபரிடம் இருந்து 16 சவரன் தங்க செயின் பறிப்பு : 12 மணி நேரத்தில் நடந்த அதிரடி நடவடிக்கை… 3 பேர் கைது!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2022, 6:14 pm

விருதுநகர் லட்சுமி நகரில் நேற்று செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்

விருதுநகர் லட்சுமி நகரை சார்ந்தவர் கந்தசாமி (வயது 72). இவர் நேற்று மதியம் லட்சுமி நகரில் உள்ள தனது இல்லத்திற்கு சென்ற போது வீட்டு வாசல் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கியுள்ளார்.

அப்போது இவரை காரில் பின்தொடர்ந்து வந்த மூன்று நபர்கள் அவரை தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த 16 சவரன் தங்க செயினை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து ஊரக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளை சம்பவத்தை ஈடுபட்டவர்கள் குறித்த காவல்துறையினர் நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டால் கார் யாருடையது என்பது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கார் விருதுநகர் சார்ந்த தனியார் டிராவல்ஸ் ராஜ்குமார் என்பவருடையது என்பது தெரிய வந்தது.

ராஜ்குமாரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் இந்த வாகனத்தை கடந்த சனிக்கிழமை விருதுநகர் தீயணைப்புத் துறையில் பணிபுரியும் திருப்பதி என்பவர் வாடகைக்கு பெற்று சென்றது தெரியவந்தது.

அதை தொடர்ந்து திருப்பதியிடம் நடத்திய விசாரணையில் திருப்பதி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் அழகர் ஆகிய மூவரும் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை அடுத்து அவர்கள் 3 நபர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கருப்பு, சதீஷ்குமார், மகாலட்சுமி, ஈஸ்வரன் ஆகிய நான்கு நபர்களையும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

சம்பவம் நடந்து 20 மணி நேரத்திற்குள்ளாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த நகையும் மீட்ட காவல்துறையினரின் செயல்பாடு வரவேற்பை பெற்றுள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…