17 வயது சிறுமிக்கு 6 வருடமாக அரங்கேறிய கொடூரம்.. அத்துமீறிய வளர்ப்பு தந்தை.. கோவையில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2023, 3:30 pm

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு 2 வயதாக இருந்தபோது தந்தை இறந்து விட்டதால், இவரது தாய் பெயிண்டர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து சிறுமி, வளர்ப்பு தந்தை பராமரிப்பிலே வளர்ந்து வந்தார். இந்நிலையில் தற்பொழுது சிறுமி, கல்லூரிக்கு சென்று வந்த நிலையில் வளர்ப்பு தந்தையான பெயிண்டர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மேலும் இதைப்பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி பல நாட்களாக மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து திடீரென மாணவியின் தாயாருக்கும், பெயிண்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பெயிண்டர் கோபித்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார்.

அப்பொழுது மாணவி, பெயிண்டர் தொடர்ந்து 6 வருடமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது பற்றி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மேல் போலீசார் சட்டத்தின் கீழ் பெயிண்டரை கைது செய்தனர். பின்பு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 2802

    2

    2