17 வயது சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை… சாவில் மர்மம் ; தாயாரிடம் போலீசார் விசாரணை..!!!

Author: Babu Lakshmanan
23 February 2024, 6:06 pm

திண்டுக்கல் அருகே பதினேழு வயது மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ஆர்த்தி என்ற 17 வயது மகள் உள்ளார். பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்துள்ளார்.

இவரது தந்தை குப்புசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால், இவரது தாயார் நடத்தை சரி இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக வீட்டில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.

நேற்று இரவு வீட்டில் படுக்கச் சென்ற மாணவி ஆர்த்தி வீட்டில் தூக்கிட்டு இறந்ததாக அவரது தாயார் கூறியதை அடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர்.

மேலும், 17 வயது மாணவி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..? இறப்பில் எதுவும் மர்மம் உள்ளதா என்பது குறித்து நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி