17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை கொன்ற 54 வயது முதியவரின் அந்தரங்க அரங்கேற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே தாய், மற்றும் 17 வயதுடைய மகள் வசித்து வந்துள்ளளனர். அரங்கபாளையம் பகுதியை சேர்ந்த வீராச்சாமி (54) என்பவர் திருமணம் ஆகி முதல் மனைவியை விவாகரத்து பெற்று இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தாய், மகள் இருவர் வீராசாமி தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர். அடிக்கடி 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி ஒரு வருடத்திற்கு முன்பு தகாத உறவில் ஈடுபட்டு இரண்டு முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து தாய் மற்றும் மகள் இது குறித்து வெளியில் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளனர்.
மேலும் படிக்க: சென்னையில் போலி வங்கிகள்.. தனி ராஜ்ஜியம் நடத்திய இளைஞர்.. சிக்கும் முக்கியப் புள்ளிகள் : பரபர பின்னணி!!
இந்த நிலையில் மீண்டும் 17 வயதுடைய சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார் இதனை வீட்டில் யாருக்கும் சொல்லாத நிலையில் 7 மாதம் கர்ப்பமாக இருந்ததால் வயிற்று வலியால் துடித்ததாகவும், கருக்கலைப்பாகி குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததாகவும், திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் அச்சமடைந்து அதனை மறைக்கும் நோக்கத்தில் பெண்ணின் தாயார் தனது வீட்டில் பிறந்த குழந்தையை கட்டைப்பையில் எடுத்துச் சென்று வீட்டிற்கு அருகில் உள்ள அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார்.
பின்னர் வயிற்று வலியால் துடித்த 17 வயதுடைய மகளை சின்னதாராபுரம் தனியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவர்கள் இல்லாததால் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கும் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 01.10.24 ஆம் தேதியில் சென்று உள் நோயாளியாக சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
அப்போது மருத்துவர் பரிசோதனை மேற்கொண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் இது குறித்த தகவலை காவல்துறையினருக்கு கொடுத்ததன் அடிப்படையில் சின்ன தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் அழகு ராமன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு அமராவதி ஆற்றில் புதைக்கப்பட்ட பெண் குழந்தையை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் 17 வயதுடைய சிறுமையை கட்டாயப்படுத்தி கற்பமாக்கிய அரவக்குறிச்சி ரங்கபாளையத்தைச் சேர்ந்த வீராச்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் 17 வயதுடைய சிறுமியை கர்ப்பம் ஆக்கியதும் தெரிய வந்துள்ளது.
பின்னர் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.2 வருடமாக தனது தோட்டத்தில் வேலை பார்த்த குடும்பத்தை காம இச்சைக்கு பயன்படுத்திய காமக் கொடூரனின் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
This website uses cookies.