மாயமான மாணவி… ஆசை வார்த்தை கூறி ஆந்திராவுக்கு கடத்தி உல்லாசம் : பாய்ந்தது போக்சோ!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2024, 9:42 am

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17வயது பெண் ஒருவர் காணாமல் போனதாக அந்த பெண்ணின் தாயார் குடியாத்தம் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவன் குடியாத்தம் அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான குமரேசன் (27வயது) என்பதும் இவர் 17 வயது பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

மேலும் ஆந்திர மாநிலத்தில் இருந்த கூலித் தொழிலாளி குமரேசனை கைது செய்து 17 வயது பெண்ணை மீட்டு தாயிடம் அனுப்பி வைத்து கூலித் தொழிலாளி குமரேசனை சட்டத்தின் கீழ் கைது செய்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூலி தொழிலாளி குமரேசனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!