பைக்கில் துரத்துச் சென்று அரிவாள் வெட்டு.. 175 சவரன் நகை கொள்ளை… சினிமாவை மிஞ்சிய சம்பவம் ; 5 தனிப்படைகள் அமைப்பு..!!
Author: Babu Lakshmanan20 March 2023, 9:58 pm
திருவள்ளுர் ; வெங்கல் அருகே நகை கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 175 சவரன் நகைகளை சினிமா பாணியில் பட்டப்பகலில் பின் தொடர்ந்து தாக்கி கத்தியை காட்டி வெட்டி வழிமறித்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நெற்குன்றம் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் ராமேஸ்லால் கடையில் பணியாற்றும் சோகன்லால் காலூராம். வெங்கல் அடுத்த பூச்சிஅத்திப்பேடு பகுதியில் நகைகடைகளுக்கு விற்பனை செய்ய 175 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்க பணத்தை கொண்டு வந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற போது சினிமா பாணியில் அவரை பின்தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவரை வழிமறித்து கத்தியால் தாக்கி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வழிப்பறி சம்பவம் நடந்த பகுதியில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யான் நேரில் விசாரணை மேற்கொண்டு கைகளில் காயம் அடைந்த காலூராமை சிகிச்சைக்கு அனுமதித்ததனர்.
பின்னர் வெங்கல் காவல் துறையினர் வழிப்பறி தொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைக் கொண்டு தப்பியோடிய கொள்ளையர்களை 5 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
நகைக் கடைகளுக்கு நகைகளை விற்பனைக்கு இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்த போது பட்டப் பகலில் கத்தியால் அவர்களை வெட்டி விட்டு சினிமா பாணியில் நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..