திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 4 கிலோ மீட்டர் தொலைவில் அக்கரைப்பட்டி கிராமத்தில் பாறையில் ஆயிரம் ஆண்டு பழமையான அய்யனார் கல்லுப்புலியான் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆடி மாதம் 18 பட்டி கிராம பொதுமக்களும் சேர்ந்து திருவிழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொங்கல் வைத்தும், ஆடுகளை பலி கொடுத்து வழிபட்டு செல்வார்கள்.
கல்லு புலியான் கோவில் அருகே பெரிய கல்இச்சி மரத்திற்கு அடியில் நீரூற்று பல வருடங்களாக இருந்து வருகிறது. 18 சித்தர்கள் தவம் இருந்த இடம் என்பதால் அந்த இடம் தற்போது சுனையாக உள்ளது என தற்போது உள்ள 7வது தலைமுறை பூசாரி பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார்.
இந்த நீரூற்று எந்த காலத்திலும் தண்ணீர் இருக்கும், நீர் வற்றியதாக இதுவரை சரித்திரமே கிடையாது. அய்யனார் கல்லுப்புலியான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் இந்த நீரூற்றுக்கு சென்று தலையில் தண்ணியை தெளித்துக் கொண்டு பின்னர் சாமி தரிசனம் செய்ய செல்வார்கள்.
மேலும் பொதுமக்கள் வேண்டுதலின் போது பொங்கல் வைக்க இங்கிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் தான் பொங்கல் வைப்பார்கள். இந்த நீரூற்றில் சுத்தமாகவும், சுவையாகவும் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்கும். மேலும் இங்கு தரிசனம் செய்ய வருவார்கள் இந்த நீரை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது.
அய்யனார் கல்லுபுலியான் கோவிலுக்கு தினமும் காலை 5 மணிக்கு பன்னீர்செல்வம் என்கிற பூசாரி இந்த நீரூற்றிலிருந்து தினமும் நீரை எடுத்துக் கொண்டு அய்யனார் கல்லுபுலியான் கோவிலில் பூஜை செய்வார்.
இதேபோன்று மாலையும் அந்த நீரூற்றிலிருந்து நீரை எடுத்துக் கொண்டு வந்து தான் பூஜை செய்வார் இது தினமும் நடைபெறுவது வழக்கம். கோவிலுக்கு உண்டான சக்தி இந்த நீரூற்றில் தான் இருக்கிறது என்ன கல்லுப்புலியான் கோவில் பூசாரி தெரிவிக்கிறார்.
இதனால் இந்த நீரை புனித நீராக அப்பகுதி மக்கள் கருதி வழிபட்டு வருகின்றனர். நீரூற்றில் நீர் பாறையில் இருந்து வருகிறது என்று கூறுகிறார்கள். எவ்வளவு வறட்சி காலமாக இருந்தாலும் இந்த நீரூற்றில் தண்ணீர் இருந்து கொண்டே தான் இருக்கும்.
மேலும் இங்கு வரும் நீர் எங்கிருந்து வருகின்றது என்று கண்டுபிடிக்க இயலவில்லை. ஊற்று போல மரத்தின் வேர்களில் இடையில் இருந்து நீர் வந்து கொண்டே இருக்கிறது.
நியாயமான விஷயத்திற்கு வேண்டி வரும் பக்தர்கள் நினைத்ததை நடத்திக் கொடுப்பார் இந்த கல்லுபுலியான் சாமி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் சுனையில் கல் இச்சி மரம் இருக்கும் அதே போன்று பாறையில் இருக்கும் கல்லுபுலியான் மேல் பகுதியில் கல் இச்சி மரமும் இருக்கும். மேலும் சுனை நீரூற்று அருகே 2 பனைமரம் உள்ளது அங்கு கருப்புசாமி இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் இந்த தண்ணீரை தவறாக பயன்படுத்த பலரும் பயப்படுவார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதியம் நேரத்தில் யாரும் இல்லாத பொழுது ஒரு சில மதுபான பிரியர்கள் இந்த நீரை வைத்து மது அருந்தியுள்ளனர். மது அருந்திய பலரை அய்யனார் கல்லுப்புலியான் சாமி தண்டித்தும் உள்ளது.
இதனால் இங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தற்போது வரை கல்லு புலியான் சாமி பாதுகாத்து வருகிறார் என அப்பகுதி மக்கள் பக்தி பயத்துடன் தெரிவிக்கின்றனர்.
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
This website uses cookies.