உயிரைப் பறித்த ஆன்லைன் டயட் டிப்ஸ்.. கேரளா பெண்ணுக்கு சோகம்!

Author: Hariharasudhan
11 March 2025, 8:56 am

கேரளா, கண்ணூரில் யூடியூபில் உடல் எடையைக் குறைக்க டிப்ஸ் பார்த்து ஃபாலோ செய்த இளம்பெண் உயிரிழந்துள்ளதால் சோகம் ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா (18). இவரது உடல் எடை அண்மைக் காலங்களில் அதிகாித்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, அவர் தனது உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தொடர்ந்து யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அவர் இது தொடர்பான வீடியோக்களை தேடி, அதில் கூறுவது போன்றே உணவுப் பழக்கத்தை மாற்றி உள்ளதாகவும் தெரிகிறது. அதேநேரம், உடல் எடை குறைப்பு தொடர்பாக எந்தவொரு மருத்துவரையும் ஸ்ரீநந்தா அணுகவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

மேலும், இவர் கடந்த ஆறு மாதங்களாக தண்ணீர் வகை உணவுகளையே எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து, அவரது உடல் எடை வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில், ஸ்ரீநந்தாவுக்கு திடீர் உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது.

Diet kerala girl died

இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர், அவரை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநந்தா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதையும் படிங்க: அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

மேலும், இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “ஸ்ரீநந்தா தொடர்ந்து உடல் எடையைக் குறைக்க குறைந்த அளவு உணவு சாப்பிட்டு டயட் கன்ட்ரோல் செய்து வந்ததால் குடல் சுறுங்கியுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீநந்தா உயிரிழந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.

  • Dragon Tamil movie worldwide collection தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!
  • Leave a Reply