அரைமணி நேரத்தில் சிக்கிய கொலையாளி.. முதியவர் கொடூரக் கொலை!
Author: Hariharasudhan9 January 2025, 11:18 am
சிவகங்கையில் 70 வயது முதியவரைக் கொன்ற 18 வயது இளைஞரை அரைமணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள காஞ்சிரங்குளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (70). இவரது வீட்டின் அருகே வசிப்பவர் சக்தி கணேஷ் (18). இவர் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும்,
இவர் மீது இரண்டுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கருப்பையாவுக்கும், சக்தி கணேஷ் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கருப்பையாவை, சக்தி கணேஷ் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், மானாமதுரை டிஎஸ்பி நிரேஷ் தலைமையிலான போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து கருப்பையாவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஒரே ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்க… நாள் முழுக்க ஃபிரஷா ஃபீல் பண்ணுவீங்க!!!
மேலும், தப்பி ஓடிய இளைஞரையும் உடனடியாக போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வாறு அரை மணி நேரத்தில் கொலையாளியைப் பிடித்த போலீசாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.