தூத்துக்குடி அருகே வீட்டு பாடத்தினை வேறு நோட்டில் எழுதியதற்காக 1ம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியை பலத்த காயத்துடன் மாணவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம், பழையகாயல் ராமச்சந்திரபுரத்தை சார்ந்தவர் மகேஷ். இவர் எலக்ட்ரிஷனாக வேலை செய்து வருகின்றார். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். இவருக்கு ஷிவானி என்ற 4வது வகுப்பு படிக்கும் மகளும், ஹரிசரன் என்ற 1வது வகுப்பு படிக்கும் மகனும் இருந்து வருகின்றனர்.
இருவரும் ஆத்தூர் சண்முகசுந்தரநாடார் மேனிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு 1வது வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிசரண் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது அவரது தந்தை மகேஷ் அவனது உடைகளை கழற்றி பார்த்தபோது அவரது உடம்பெல்லாம் 10 இடங்களில் கம்பால் அடித்த காயம் இருந்துள்ளது.
மேலும் இதுகுறித்து தனது மகனிடம் மகேஷ் விசாரித்தபோது வீட்டு பாடத்தினை வேறு நோட்டில் எழுதிவிட்டு சென்றதற்கு 1வது வகுப்பு ஆசிரியர் கோமதி என்பவர் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இது சம்பந்தமாக அவனது பள்ளி தலைமை ஆசிரியர் ரஞ்சித்திடம் அவரது தந்தை மகேஷ் கூறியபோது பொறுப்பற்ற பதிலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவன் ஹரிசரன் காயங்களோடு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.