முதல்முறையாக கோவை – திருப்பதிக்கு அரசுப் பேருந்து சேவை… தனியாருக்கே டஃப் கொடுக்கும் வசதிகள்… கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
12 August 2022, 10:06 pm

கோவையில் இருந்து திருப்பதிக்கு முதல்முறையாக அரசு நேரடிப் போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் திருப்பதிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் பேருந்தை மாவட்ட ஆட்சியர் காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் அனைவருக்கும் சிற்றுண்டிகள் அடங்கிய பைகளையும் வழங்கினார்.அவருடன் திருப்பதி செல்லும் மக்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

4000 ரூபாய் கட்டணத்தில் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. இக்கட்டணத்தில் உணவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் செல்ல விரும்பும் பொதுமக்கள், www.ttdconline.com என்ற தளத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம் அல்லது காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் திருப்பதியில் அறைகள் (for refresh) வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழிகாட்டி ஒருவர் உடனிருப்பார் எனவும் அவர் திருப்பதி சாமி தரிசனம் அலமேலு மங்கை தரிசனத்திற்கு அழைத்து செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீட்டிங்(non sleeping) பேருந்து மட்டும் விடப்பட்டுள்ளது. அரசு சார்பில் கோவையில் இருந்து திருப்பதிக்கு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!