கோவை மருதமலை கோவிலில் ₹2.50 லட்சம் கையாடல் : விடுப்பில் சென்ற டிக்கெட் எழுத்தர் மீது வழக்குப்பதிவு!
Author: Udayachandran RadhaKrishnan4 March 2024, 8:39 am
கோவை மருதமலை கோவிலில் ₹2.50 லட்சம் கையாடல் : விடுப்பில் சென்ற டிக்கெட் எழுத்தர் மீது வழக்குப்பதிவு!
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் பேருந்து மற்றும் மலை மேல் கோவில் வளாகத்தில் அர்ச்சனை செய்வதற்காகவும் டிக்கெட் வழங்கப்படுகிறது.
இந்த டிக்கெட் மூலம் கிடைக்கும் தொகையை அந்தந்த டிக்கெட் எழுத்தாளர்கள் கோவில் போலீசாரிடம் வழங்கி மறுநாள் காலை கல்வீரம்பாளையத்தில் உள்ள வங்கியில் கோவிலின் கணக்கில் செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் கோவில் டிக்கெட் எழுத்தராக உள்ள தீனதயாநிதி என்பவர் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 800 ரூபாய் மட்டும் கோவில் காசாளரிடம் வழங்கி உள்ளார்.
அதேபோல் மேலும் வசூலான ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 370 ரூபாயையும் வழங்கவில்லை.இதனால் கோவில் பணம் 2.50 லட்சம் ரூபாய் கோவில் வங்கி கணக்கு செல்லாமல் இருந்தது.
கோவில் காசாளர் இதனை பரிசோதனை செய்த போது டிக்கெட் எழுத்தர் தீனதயா நிதி கோவில் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.
தீனதயாநிதி விடுப்பில் சென்று விட்டார். கையாடல் குறித்து அறிந்த கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி தீனதயா நீதியின் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதன் பின்பு தீன தயாநிதி 2.50 லட்சம் ரூபாய் கோவிலில் திருப்பி செலுத்தி உள்ளார்.பணம் கையாடல் குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.