எவ்வளவு முறை சொல்லியும் கேட்காத மின்சாரத்துறை அதிகாரிகள்… 2 குழந்தைகள் பரிதாப பலி ; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
6 November 2023, 9:25 am

மின்சாரத் துறையினரின் அலட்சியத்தால் இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே மம்மானியுரை சேர்ந்தவர் சுந்தரம், மனைவி நல்லம்மாள். இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு அழகுமீனா(16), போதுமணி (14), முத்துச்சாமி (12), குமார்(6), புவனேஸ்வரி (2) என ஐந்து குழந்தைகள் உள்ளது. இரண்டு நாட்களாக மின்கசிவு ஏற்படுவதாக அய்யலூர் மின்வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளார்கள்.

மழைக்காலம் என்பதால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே மின் கசிவு ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் கூறியுள்ளார்கள். அங்கு வந்த அதிகாரிகள் ஒன்றும் இல்லை என்று சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

இன்றும் மின் கசிவு ஏற்பட்டதாகக் கூறியும் அதிகாரிகள் அலட்சியமாக எடுத்துக் கொண்டு வராத நிலையில், அழகு மீனாவும், குமாரும் தங்களுடைய குடிசை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!