பிரபல தொழிலதிபர் வீட்டில் ₹2 கோடி ரொக்கம், நகைகள் கொள்ளை : சிக்கிய கருப்பு ஆடு!
Author: Udayachandran RadhaKrishnan14 February 2025, 12:56 pm
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாராயணகுடாவில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ரோஹித் கேடியாவின் வீடு உள்ளது. அங்கு 20 பேர் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த பத்தாம் தேதி ரோஹித் கேடியா குடும்பத்தினர் துபாயில் வசிக்கும் தங்கள் மகளின் திருமண நாளை கொண்டாடுவதற்காக அங்கு சென்று இருந்தனர். அப்போது ரோகித் கேடியா வீட்டில் சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்வதற்காக பணியமர்த்தப்பட்டுருந்த பீகாரை சேர்ந்த இரண்டு பேர் வீட்டிலிருந்த பீரோ, லாக்கர் ஆகியவற்றை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ₹ 2 கோடி மதிப்புள்ள ரொக்க பணம், தங்க, வைர ஆபரணங்கள், வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இதையும் படியுங்க: உளவுத்துறை கொடுத்த வார்னிங்… விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்த மத்திய அரசு!
இது தொடர்பாக கேடியாவின் உறவினர்களில் ஒருவரான அவருடைய வீட்டில் வேலை செய்யும் அபய் கேடியா அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த நாராயணகுடா போலீசார் ரோஹித் கேடியா வீட்டிற்கு சென்று தடயங்களை சேகரித்து அந்த வீட்டில் வேலையாட்களாக வேலை செய்து தப்பி ஓடிய நபர்களை தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அவர்களை பிடிப்பதற்காக பிகாருக்கு மூன்று தனிப்படைகள் அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் ரோஹித் கேடியா வீட்டில் கொள்ளை அடித்து ரயில் மூலம் தப்பி ஓடிய பீகாரை சேர்ந்த சமையல்காரர் சுசில் முஹிக்கியா, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பசந்த் அர்கி ஆகியோரை அம்மாநில போலீசார் ஒத்துழைப்புடன் சிசிடிவி கேமரா பதிவுகளை பின்தொடர்ந்து நாக்பூரில் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ₹ 2 கோடி மதிப்புள்ள ரொக்க பணம் தங்க வைர ஆபரணங்கள் வெளிநாட்டுகராட்சிகள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் மதுபானி என்று கூறப்படும் பீகாரை சேர்ந்த ஒரு கொள்ளை கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் பெரும் நகரங்களில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வரும் மார்வாடிகள் குடும்பத்தை தேர்வு செய்து ஏதோ ஒரு வகையில் அவர்களுடைய வீடுகளில் வேலை செய்ய சேர்ந்து கொள்வார்கள்.
அதன்பின் பல மாதங்கள் அந்த வீட்டை நுணுக்கமாக நோட்டமிட்டு சமயம் கிடைக்கும் போது அங்குள்ள மொத்த பொருட்களையும் கொள்ளை அடித்து சென்று விடுவார்கள்.
கொள்ளையடிக்கும் அப்போது யாராவது குறுக்கிட்டாள் அவர்களை கொலை செய்து தங்களுடைய கொள்ளை முயற்சியை அரங்கேற்றுவதும் இந்த கும்பலின் வழக்கம் என்று போலீசார் தெரிவித்தனர் .