ஆக்ரோஷமாக துரத்திய யானை… அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே சோகம்!
Author: Udayachandran RadhaKrishnan16 April 2025, 11:01 am
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே காட்டுயானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.
பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த இரண்டு மூன்று குடும்பத்தினர் அதிரப்பள்ளி வஞ்சிக் கோடு பகுதியில் குடியிருந்து வனவளங்களை சேகரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று திடீரென காட்டுயானைகள் துரத்தி தாக்கியதாகவும் இதில் சதீஷன் மற்றும் அம்பிகா ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து இருவரையும் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை இருவரும் சடலமாக மீட்கப்பட்டு சாலக்குடியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் நேற்று முன்தினம் அதிரப்பள்ளி பகுதியில் காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.