பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக கேட்டதால் ஆத்திரம்… மதுபோதையில் டாஸ்மாக் முன்பு பீர் பாட்டிலை உடைத்து இருவர் ரகளை!!

Author: Babu Lakshmanan
1 May 2024, 2:57 pm

சேலம் ; ஆத்தூர் அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் கூடுதலாக கேட்டதால் மது போதையில் கடையின் முன்பு பீர் பாட்டிலை உடைத்து ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் பட்டுத்துறையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 29ம் தேதி மதுபோதையில் கடைக்கு மதுப்பாட்டில்கள் வாங்க வந்த நபர்களிடம் மதுபாட்டில் ஒன்றுக்கு விற்பனையாளர் கூடுதலாக பத்து ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ரூ.770 EMIக்காக மனைவியை சிறைபிடித்த IDFC வங்கி ஊழியர்… பதறியடித்துச் சென்ற கூலித் தொழிலாளி ; சேலத்தில் பரபரப்பு!

இதனால் குடிபோதையில் இருந்த நபர்கள் கடையின் முன்பு உள்ள இரும்பு கேட்டில் பீர் பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, டாஸ்மாக் மதுபான கடையினுள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி, கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கடையின் மேற்பார்வையாளர் முருகேசன் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் டாஸ்மாக் கடையில் ரகளையில் ஈடுபட்டனர்.

பின்னர், ரகளையில் ஈடுபட்டதாக சதாசிவபுரத்தை சேர்ந்த ராஜதுரை [48 ], மாதேஸ்வரன் [40 ] ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!