நாளை +2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது… வீட்டில் இருந்தே ரிசல்ட்டை பார்க்க ஏற்பாடு…!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2024, 10:56 am

நாளை +2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது… வீட்டில் இருந்தே ரிசல்ட்டை பார்க்க ஏற்பாடு…!!!

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதி இருக்கிறார்கள்.

தேர்வு எழுதி இருந்த மாணவ-மாணவிகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்து முடிந்தது. ஏற்கனவே பொதுத்தேர்வு தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்ட போதே, தேர்வு முடிவு குறித்த தேதியும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, மே 6-ந்தேதி (நாளை) வெளியாகும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது. இடையில் அதே தேதியில் தேர்வு முடிவு வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை திட்டமிட்டபடி மே 6-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவித்ததோடு, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கும் வருகிற 10-ந்தேதி பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் என்றும் தெரிவித்தது.

அதன்படி, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. நாளை (திங்கட்கிழமை) காலை தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுகிறாரா? அல்லது அரசு தேர்வுத் துறையே வெளியிடுகிறதா? என்பது தொடர்பான விவரங்கள் இன்று தெரிவிக்கப்பட உள்ளது.

மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்கள் பள்ளிகளில் கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் விவரங்கள் வழக்கம்போல அனுப்பி வைக்கப்பட உள்ளன. மேலும் அரசுத் தேர்வுத் துறையின் இணையதளத்தில் சென்றும் தெரிந்துகொள்ளலாம்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?