+2 படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் : கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2024, 1:38 pm

+2 படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் : கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

கோவையில் மருந்து கடை வைத்திருந்த நபர் போலி மருத்துவராக செயல்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை நீலிக்கோனம்பாளையம் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவ மற்றும் ஊரக நலம் பணிகள் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் போலீசாருடன் அங்கு சென்ற அரசு அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.அப்போது போலியாக மருத்துவர்,மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து மருந்து கடை மற்றும் கிளினிக்-யை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்ததை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் போலி மருத்துவரின் பெயர் தேவராஜ் என்பதும் இவர் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதும் அப்பகுதியில் மருந்து கடை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலி மருத்துவர் தேவராஜை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Shankar's Game Changer vs Sundar C's Madagatharaja வெளுத்து வாங்கும் மதகஜராஜா…. காணாமல் போன பிரம்மாண்ட இயக்குனர்…!