கடமலைக்குண்டு கிராமத்தில் இரு குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் கட்டையால் அடித்து தாக்கிய காட்சிகள் வெளியான நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவரின் வீட்டில் ஒத்திக்கு சசிக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டில் கழிவுநீர் செல்வதில் இரண்டு குடும்பத்திற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திடீரென சரிந்து விழுந்த பிரச்சார மேடை… அடுத்தடுத்து ஆட்டம் கண்ட ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ!!!
இந்த நிலையில், நேற்று பாலமுருகன் மனைவி ஜெயலட்சுமி, சசிக்குமார் குடும்பத்தினரை ஜாடை பேசியதாக தெரிகிறது. அப்போது, சசிக்குமார் வீட்டிற்கு மஞ்சுனூத்து கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் குமரேசன், அபிமன்யூ, விக்னேஷ், மனோஜ், மதன் ஆகியோர் வந்தனர். தனது உறவினரான சசிக்குமார் குடும்பத்தினருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்ட ஜெயலட்சுமி, அவருடைய அண்ணன் வாசககுமார், மாமா மாலியன் ஆகியோரை அசிங்கமாக பேசி, கம்பு, மண்வெட்டி பிடி, கட்டை, கம்பியை கொண்டு சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
இந்த காட்சியை அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். அந்த காட்சியில் ஜெயலட்சுமி, வாசககுமார், மாலியன் ஆகியோரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஜெயலட்சுமி கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெயலட்சுமி மற்றும் குடும்பத்தினரை தாக்கிய 5 பேரை கைது செய்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஜெயலட்சுமி, வாசககுமார், மாலியன் ஆகியோர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குடும்பத்தினரை ஆயுதங்களால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கடமலைக்குண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.