புதுக்கோட்டை அருகே குளத்து நீரில் சகோதரிகள் இருவர் மற்றும் அவர்களது சித்தப்பா என மூவர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் – விஜயலட்சுமி தம்பதி. தனது மகள்கள் அக்க்ஷயா(15)மற்றும் தனலெட்சுமி(12) ஆகியோருடன் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்துவிடுதி கிராமத்தில் அமைந்துள்ள மயிலியாத்தம்மன் கோயில் கிடா வெட்டு பூஜைக்காக வந்துள்ளனர். இவர்களுடன் விஜயகாந்தின் தம்பி ஆனந்த குமாரும்(29) வந்துள்ளார்.
இந்த நிலையில், அதே கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் குளத்தில் குளிப்பதற்காக அக்க்ஷயா மற்றும் அவரது தங்கை தனலெட்சுமி, அவர்களது சித்தப்பா ஆனந்த குமார் ஆகிய மூவரும் சென்றுள்ளனர்.
குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது தனலட்சுமி நீரில் மூழ்கவே அவரை காப்பாற்ற அக்க்ஷயா மற்றும் ஆனந்தகுமார் ஆகிய இருவரும் முயன்றுள்ளனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் மூவரையும் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாக அவர்கள் மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் மூவர் சடலங்களையும் மீட்ட அந்த பகுதி மக்கள் பிரேத பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததின் பேரில் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் துறையினரும் வருவாய் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
This website uses cookies.