படிக்க ஆர்வமில்ல… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள்… 5 மணிநேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார்..!!
Author: Babu Lakshmanan23 May 2022, 11:46 am
கோவை : வேலை தேடி வீட்டிலிருந்து வெளியேறிய இரு சகோதரிகள் வீட்டிலிருந்து மாயமாகி, புகார் தந்தை 5 மணிநேரத்தில் போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
திருப்பூர் படியூரை சேர்ந்த இரண்டு சகோதரிகள் (மைனர் கேர்ல்ஸ்). சிறுமிகளின் தந்தை ஆசாரி. தாய் பணியன் கம்பெனியில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளி. இந்த நிலையில், படிப்பில் பெரும் நாட்டம் இன்றி இருந்த இரண்டு சிறுமிகளை அவரது தாய், தந்தை கோயமுத்தூர் ஆவாராம்பாளையத்தில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் தங்க வைத்து பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டிருக்கின்றனர்.
ஆனாலும் பள்ளி செல்லவும், படிப்பில் நாட்டமின்றியும் சிறுமிகள் இருந்திருக்கின்றனர். இந்த நிலையில், சிறுமிகள் இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு மாயமாகினர். இரண்டு சிறுமிகளும் திருப்பூருக்கு சென்றிருப்பார்கள் என அவரது குடும்பத்தார் நினைத்திருக்கின்றனர். ஆனால், சிறுமிகள் சொந்த ஊருக்கும் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேற்று மதியம் 2 மணிக்கு கோவை, இராமநாதபுரம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் தந்திருக்கின்றனர்.
புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் நிஷா, உதவிய ஆய்வாளர் நித்யா ஆகியோர் சிறுமிகளின் பாட புத்தகம், சிறுமிகளின் தாய்மாமன் ஆகியோரின் அலைபேசிகளை வாங்கி சோதனையிட்டனர். பாட புத்தகத்தில் சிறுமிகள் சில அலைபேசி எண்களை எழுதி வைத்திருக்கின்றனர். சிறுமிகள் அவரது தாய்மாமன் போனிலிருந்து இன்ஸ்டாகிராமில் தோழிகளுடன் பேசியிருக்கின்றனர்.
அவர்களை தொடர்புகொண்ட மகளீர் போலீஸார் சிறுமிகள் அழைத்தால் உடனடியாக தகவல் தரும்படி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அதன்படி திண்டுக்கல் தோழிக்கு மாயமான சிறுமிகள் முதலில் அழைத்தது தொடர்பாக தகவல் தரப்பட்டது. சிறுமிகள் அழைத்த போன் நெம்பரை ட்ரேஷ் செய்த போது, அது பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடைக்காரரின் போன் என்றும், அந்த சிறுமிகள் அங்கிருந்து புறப்பட்டதும் தெரியவந்தது.
மாயமான சிறுமிகள் திருச்சி, திண்டுக்கல் , மதுரை மார்க்கமாக இருப்பதனை முதலில் போலீஸார் அறிந்துகொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் இருக்கின்ற சிறுமிகளின் தோழிகளிடம் போலீஸார் தகவலுக்காக பேசிவந்தனர். அப்போது, திருச்சியில் உள்ள இன்ஸ்டாகிராம் தோழிக்கு சிறுமிகள் அழைத்திருக்கின்றனர்.
உடனடியாக போலீஸாருக்கு சிறுமிகளின் தோழி, மாயமான சிறுமிகள் பேசிய அலைபேசி எண்ணை தந்திருக்கின்றார். அந்த அலைபேசி எண்ணை போலீஸார் அழைத்த நிலையில் முதியவர் ஒருவர் பேசியிருக்கின்றார். அப்போது, பெரும் விவரம் இன்றி இருந்த முதியவரை பார்த்த கண்டெக்டர் என்னவென்று கேட்டிருக்கின்றார். அப்போது, அலைபேசியை வாங்கிய பேசியபோது மற்றோர் முனையில் மகளீர் போலிஸ் பேசியிருக்கின்றனர். நடத்துனர் முனியப்பனிடம் சிறுமிகள் விவரத்தை போலீஸர் சொல்லியிருக்கின்றனர்.
உடனே போலீஸார் சிறுமிகள் மாயமான விவரத்தை சொல்லி அவர்களை மீட்க உதவுமாறு கேட்டுக்கொண்டனர். நடத்துனர் முனியப்பனிடம் பேசிய போலீஸார், அந்த பேருந்து மதுரையிலிருந்து திருச்சி சென்றுகொண்டிருக்கின்ற பேருந்து என்பதனையும், அவர்கள் பேசிக்கொண்டிருந்த சமயம் மேலூர் அருகே சென்று கொண்டிருப்பதையும் அறிந்தனர்.
உடனடியாக மேலூர் போலீஸுக்கு அழைத்து சிறுமிகள் விவரத்தை தெரிவித்திருக்கின்றனர். சிறுமிகள் இருவரையும் நடத்துனர் முனியப்பன் , ஓட்டுநர் ஆண்டிசாமி இருவரும் பத்திரமாக மேலூர் போலீஸிடம் ஒப்படைத்தனர். முன்னதாக, விரைந்த ராமநாதபுரம் மகளீர் போலிஸ் சிறுமிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிகை எடுத்து வருகின்றனர்.
அவர்களிடம் முதல்கட்டமாக நடத்திய விசாரணை அடிப்படையில், பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததனால் பணிக்கு செல்லலாம் என எண்ணி வீட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர். மாயமான சிறுமிகளை மீட்க காவல் துறைக்கு கண்டெக்டரும் டிரைவரும் உதவியதை வெகுவாக பாராட்டினர்.
படிக்க சொல்வதனாலும், அலைபேசியில் சமூக வலைதளம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாதென கண்டிப்பதனாலும், கோபித்துக்கொண்டு பெரும்பாலும் சிறுமிகளே வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
எனவே, இன்றைய நிலையில் சிறார்களை குறிப்பாக சிறுமிகளை கவனமுடன் கையாள வேண்டிய நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டிருக்கின்றனர். இனி சிறார்கள் குறிப்பாக சிறுமிகள் தனியாக பேருந்திலோ, ரயிலிலோ பயணித்தால் அவர்களின் விவரத்தை ஓட்டுநர், நடத்துனர் அல்லது பொதுமக்கள் சிறுவர்களின் விவரத்தை கேட்டு அவர்கள் சாதாரண பயணிகளா அல்லது வீட்டை விட்டு வெளியேறியவர்களா என்று கேட்க வேண்டும் என மகளீர் போலீஸார் கோரியிருக்கின்றனர்.