வீட்டில் பதுக்கி வைத்திருந்தரூ.2 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் : ஒருவர் கைது…

Author: kavin kumar
17 February 2022, 9:06 pm

விருதுநகர் : சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெம்பக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. பட்டாசு தொழிற்சாலைகளில் முறையான விதிமுறைகளை பின்பற்றாததால் பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. உயிர்ச் சேதங்களும் அதிக அளவில் ஏற்படுவது வழக்கமாகி வருகிறது. இதனால் பட்டாசு தொழில் மேற்கொள்ள அரசு மற்றும் நீதிமன்றங்கள் ஏராளமான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. இதனால் பல தொழிற்சாலைகள் தொழில் செய்ய மிகவும் சிரமப்பட்டு மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

எனினும் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு மற்றும் மூலப் பொருள் உற்பத்தி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனால் பல இடங்களில் விபத்தும் உயிரிழப்பும் ஏற்பட்டு வரும் நிலையும் உள்ளது. இந்த நிலையில் வெம்பக்கோட்டை அருகிலுள்ள விஜயகரிசல்குளம் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் சுந்தர மூர்த்தி தலைமையில் வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், விஜயகரிசல்குளம் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் காளிராஜ் (55) என்பவர் வீட்டில் சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் காளிராஜ் என்பவரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்