கோவையில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த 2 முக்கிய மேம்பாலங்கள் : திமுக அமைச்சருடன், அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் இணைந்து திறப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2022, 2:04 pm

கோவை : கோவையில் 2 முக்கிய மேம்பாலங்களை திமுக, அதிமுக, பாஜக முக்கிய நிர்வாகிகள் சேர்ந்து திறந்து வைத்தனர்.

கோவை இராமநாதபுரம், கவுண்டம்பாளையம் பகுதிகளில் கடந்த 2019 ம் ஆண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டது.

இராமநாதபுரத்தில் 3.15 கி.மீ தூரத்திற்கு ரூ.238 கோடி மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பங்குசந்தை சாலையில் இருந்து ரெயின்போ பேருந்து நிறுத்தம் வரை 3.15 கி.மீ தூரத்திற்கு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதே போல கவுண்டம்பாளையம் பகுதியில் 2019 ம் ஆண்டு 1.17 கி.மீ தூரத்திற்கு 60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பால பணிகளும் நிறைவடைத்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் இரு பாலங்களையும் திறந்து வைத்தார்.

கோவை இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற பாலம் திறப்பு விழா நிகழ்வில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ( சிபிஎம்) கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் (பா.ஜ.க), கோவை வடக்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் (அதிமுக ), கோவை சிங்காநல்லூர் எம்.எல்.ஏ ஜெயராம் (அதிமுக) ,கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் திமுக, பாஜ.க தொண்டர்கள் மாறி மாறி கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாலங்களை திறந்து வைத்தார்.

இதன் பின்னர் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் கொடியசைத்து வாகனங்களை அனுப்பி வைத்தார். பின்னர் பேட்டியளித்த அவர் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இந்த பாலபணிகளை தமிழக அரசு விரைவு படுத்தி பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து இருப்பதாகவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இந்த பாலங்கள் பயனுள்ள வகையில் இருக்கும் எனவும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரிதிநிதிகள் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து பேட்டியளித்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், திமுக, பா.ஜ.க, அதிமுகவை சேர்ந்தவர்கள் இணைந்து இந்த பாலத்தை திறந்து வைத்திருப்பது மகிழ்ச்சி எனவும், மாவட்டத்திற்கு இன்னும் பல இடங்களில் பாலங்கள் தேவை எனவும் தெரிவித்த அவர், நெரிசல் மிகுந்த இடங்களை கண்டறிந்து பாலங்கள் அமைக்கவும் , மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.

இராமநாதபுரம் பாலம் மிகுந்த பயனுள்ள வகையில் இருப்பதாகவும் , சாதாரணமாக சுங்கம், இராமநாதபுரம் சிக்னல்களை கடக்க 20 முதல் அரை மணி நேரமாகும் நிலையில் பாலம் பயன்பயன்பாட்டிற்கு வந்து இருப்பதால் மிக எளிதாக இந்த பகுதிகளை கடக்க முடிவதாகவும் பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இராமநாதபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய இரு பாலங்களும் கட்டிமுடுக்கப்பட்டு சிறு,சிறு பணிகளால் பயன்பாட்டிற்கு வராமல் இருந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருப்பது கோவை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 520

    0

    0