மொபைல் கடைக்காரரிடம் போலி தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற வாலிபர்களை ஆட்டோவில் தப்பி ஓட முயற்சித்த போது, காரில் விரட்டி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் விகாஸ் நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் (22). இவர் ஓசூர் தளி ரயில்வே சந்திப்பு பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த மாதம் 9ம் தேதி 2 வாலிபர்கள் சென்று மொபைலுக்கு ரீசார்ஜ் செய்துள்ளனர். அப்போது, தாங்கள் பைபர் கேபிள் குழி தோண்டும் பணி செய்து வருவதாகவும், குழி தோண்டும்போது பழைய தங்க நாணயங்கள் கிடைத்ததாக அவரிடம் காண்பித்து அதை விற்று தர முடியுமா என கேட்டுள்ளனர். அதற்கு மொபைல் கடை உரிமையாளர் மணிகண்டன், இந்த தங்க நாணயங்களை வங்கியிலோ அல்லது வேறு கடையிலோ விற்று கொள்ளுங்கள் என அனுப்பி உள்ளார்.
அதன் பின்னர் அந்த 2 வாலிபர்களும் ஒரு வாரம் கழித்து மணிகண்டனின் மொபைல் கடைக்கு சென்று ஒரு போலியான தங்க செயினை காண்பித்து இதுபோல நிறைய தங்க நகைகள் குழி தோண்டும்போது கிடைத்துள்ளது. அதனை விற்பதற்கு ஏதாவது பார்ட்டி இருந்தால் சொல்லுங்கள் என கேட்டுள்ளனர். அப்போது, மணிகண்டனும் அந்த தங்க நகையை வாங்கி பார்த்துவிட்டு தனது நண்பரான சுரேஷ் என்பவரிடம் இது குறித்து தகவல் அளித்துள்ளார். அதனை கேட்ட சுரேஷ் இதுபோல ஏராளமானோர் போலி தங்க நகையை காண்பித்து ஏமாற்றி வருகின்றனர். அவர்களை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: இதுவரை 93 பேர்… வெடிவிபத்தை தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத CM ஸ்டாலின் ; இபிஎஸ் குற்றச்சாட்டு..!!
அதனைத்தொடர்ந்து, நேற்று அந்த 2 வாலிபர்களும் மணிகண்டனின் மொபைல் கடைக்கு சென்று ஒரு கிலோ எடை உள்ள போலியான தங்க முலாம் பூசப்பட்ட தங்க நகைகளை அவரிடம் காண்பித்து, “இந்த நகைகளை வைத்துக் கொள்ளுங்கள். இதன் மதிப்பு ஒன்னரை கோடி ரூபாய். இது பைபர் கேபிள் குழி தோண்டும்போது தங்களுக்கு கிடைத்தது. இதற்கு பதிலாக 5 லட்சம் ரூபாய் மட்டும் தங்களுக்கு கொடுங்கள். மிகவும் அவசரம் தாங்கள் ஊருக்கு செல்ல வேண்டும்,” என கேட்டுள்ளனர்.
இதனால், சந்தேகமடைந்த அவர் தனது நண்பர்களை கடைக்கு வரவழைத்துள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் மொபைல் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்களைப் பார்த்த அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து ஆட்டோவில் தப்பித்து ஓடி உள்ளனர்.
அதனைத்தொடர்ந்து மணிகண்டன், சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு காரில் ஆட்டோவில் தப்பி ஓடிய 2 வாலிபர்களை பின்தொடர்ந்து விரட்டியுள்ளனர். சுமார் இரண்டு கிமீ தூரம் அவர்களை விரட்டி சென்று மடக்கியுள்ளனர். இதில் ஒருவர் மட்டுமே அவர்களிடம் சிக்கி உள்ளார். மற்றொரு வாலிபர் தப்பி ஓடி உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ஓசூர் நகர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் போலியான தங்கத்தை மொபைல் கடைக்காரரிடம் விற்று பணம் பறிக்க முயன்றது தெரிய வந்தது.
போலீசாரின் தீவிர விசாரணையில் பிடிபட்டவர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினம் தாலுகா அல்லிகட்டை அருகே உள்ள சந்தேமேலா கிராமத்தை சேர்ந்த அக்ஷய் (22) என்பதும், தப்பி ஓடியவர் மத்திய பிரதேச மாநிலம் போபால் காந்திநகர் பகுதியை சேர்ந்த சோனு (25) என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து பிடிபட்ட அக் ஷய் என்பவரை நகர போலீசார் கைது செய்தனர். போலி தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து நகர போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.