பள்ளி மாணவர்களின் கோரிக்கை ஏற்று 2 புதிய அரசு பேருந்துகள் இயக்கம்.. பட்டாசு வெடித்து கொண்டாடடம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2024, 6:59 pm

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விலை கிராமத்திலிருந்து கலியன்விலை, மேட்டுவிலை, பூச்சிகாடு, புத்தன்தருவை, அதிசயபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக குட்டம் வரை செல்லும் புதிய பேருந்து சேவை துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த பேருந்து ஆனது காலை மற்றும் மாலை என இரு வேலைகளில் பள்ளி மாணவர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை வரவேற்கும் வகையில் இடைச்சிவிலை ஊராட்சி நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் இப்பேருந்துக்கு இரு வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதனைத் தொடர்ந்து பேருந்தில் பயணித்த மாணவர்கள், பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 826

    0

    0