10 ரூபாய் கூல் ட்ரிங்க்ஸ்: மீண்டும் நடந்த அதிர்ச்சி சம்பவம்: பல்லி எல்லாமா விற்பீங்க…?!

Author: Sudha
14 August 2024, 11:24 am

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்துார் கிராமத்தில் பல்லி விழுந்த மலிவு விலை குளிர்பானத்தைக் குடித்த 2 பேர், உடல்நலன் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்டிக்கடை ஒன்றில் நண்பர்களான மன்சூர், ரியாஸ் ஆகிய இருவரும் 10 ரூபாய்க்கு விற்கப்படும் குளிர்பானம் ஒன்றை வாங்கி சரிபாதி குடித்துள்ளனர்.

இந்நிலையில், அடியில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இருவருக்கும் கடுமையான வயிற்று வலியுடன் குமட்டல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?