திருவள்ளூர் ; திருத்தணியில் இருந்து தனது மகனை ஒரே நேரத்தில் கடித்த இரு பாம்புகளை அடித்துக் கொன்ற தந்தை, அதனை எடுத்துக் கொண்டு மகனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கொல்ல குப்பம் கிராமத்தில் வசிக்கும் மணி எல்லம்மாள். இவர்களது 7 வயது மகன் மணி. இவர்கள் அதே பகுதியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
நேற்று வழக்கம்போல அவர்களுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நள்ளிரவில் கண்ணாடி விரியான் மற்றும் கட்டுவிரியன் பாம்பு அவருடைய மகனான மணியை கடித்துவிட்டு மகன் மேலே படுத்து இருந்தது. இதனை கண்ட தகப்பனார், அந்த இரண்டு பாம்பையும் அடித்து கையில் எடுத்துக் கொண்டு, மகனையும் அழைத்துக் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கும் சென்றுள்ளார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கையில் 2 பாம்புகளையும் எடுத்துக் கொண்டு, தன் மகனுடன் சிகிச்சைக்கு வந்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவது என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.