13 வது மாடியில் இருந்து குதித்து +2 மாணவி தற்கொலை : விசாரணையில் ஷாக்… அதிர்ந்த கோவையில்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2023, 8:44 am

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் 13 வது மாடியில் இருந்து குதித்து 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இன்று பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் பெற்று வந்த நிலையில் தற்கொலை சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் 1700 க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த பகுதியில் உள்ளது. இதில் டி ப்ளாக்கில் 13வது மாடியில் வசித்து வருப்பவர் 12 ஆம் வகுப்பு மாணவி தாரணி, அரசு பள்ளியில் பயின்று வருகிறார்.

இவர்களது பெற்றோர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர். சரியாக மாணவி 9 மணி அளவில் மேலே இருந்து விழுந்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான சூழலில் இருந்த மாணவியை உறவினர்கள் கங்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாணவி உயிரிழந்தார்.

தொடர்ந்து அவரின் உடல் கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. போலீசார் விபத்தாகவும் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 608

    0

    0