ஷர்மிளா டீச்சரால் மனமுடைந்த +2 மாணவன் : டியூசனில் நடந்த சில்மிஷத்தால் சீரழிந்து போன வாழ்க்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2022, 1:57 pm

சென்னை : டியூசனுக்கு சென்ற இடத்தில் நடந்த சில்மிஷத்தால் பள்ளி மாணவனின் வாழ்க்கை பறிபோன சம்பவம் அரங்கேறியுள்ளது.

காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்களே, அதுக்கு இந்த சம்பவமும் ஒரு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். 17 வயது சிறுவனுடன் 20 வயது டீச்சர் காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி கிருஷ்ணகிரியில் வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

பள்ளிக்கு சென்ற சிறுவனை காணாமல் பரிதவித்த பெற்றோர், போலீஸ் உதவியை நாடினர். விசாரணையில் ஸ்கூல் டீச்சருடன் மாணவன் மாயமானது தெரியவந்தது. பின்னர் அவர்களை கண்டுபிடித்துவிட்டனர். இருந்தாலும் டீச்சர் தற்போது 3 மாதம் கர்ப்பம். போக்சோவில் டீச்சரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அடங்குவதற்குள் அடுத்து ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. அம்பத்தூர் உயர்நிலை பள்ளியில் 10ஆம் வகுப்பு ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் ஷர்மிளா.

24 வயதாகும் அவர், ஸ்கூல் முடிந்ததும், மாலை நேரத்தில் தன்னுடைய வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துள்ளார். அப்போது கள்ளிக்குப்பத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், ஷர்மிளாவிடம் டியூஷன் படித்துள்ளார்.

அந்த மாணவன் மீது கண்வைத்த ஷர்மிளா டீச்சர், அவனிடம் நெருக்கட் காட்டியுள்ளார். மற்ற மாணவர்களை விட இந்த மாணவன் மீது மட்டும் ஸ்பெஷல் அக்கறையை காட்டியுள்ளார்.

அந்த மாணவன் டியூஷன் முடிந்து வீட்டுக்கு சென்றாலும், போன் மூலம் அந்தரங்க அரட்டையை பேச ஆரம்பித்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாக, நேரம் கிடைக்கும்போதெல்லாம், சிறுவனிடம் சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளார் ஷர்மிளா.

மேலும் இதை போட்டோவும் எடுத்துக்கொண்ட டீச்சர், நள்ளிரவு வரை சிறுவனுடன் சேட்டிங் செய்துள்ளார். இந்த நிலையில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவன், கல்லூரி சேர தயாராகியுள்ளார். இதனால் இவர்கள் உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.

இதையடுத்து ஷர்மிளாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலமும் ஆரம்பித்தது. வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இதையடுத்து சிறுவனுடன் காதலை ஷர்மிளா நிறுத்தியுள்ளார்.

மேலும் சிறுவனை அழைத்து, இனி மெசேஸ் பண்ணக்கூடாது, போன் செய்யக்கூடாது, என ஆர்டர் போட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவன், ஷர்மிளாவை நேரில் சந்தித்து பேச வரவழைத்துள்ளார்.

இதையடுத்து நேரில் சந்தித்த போதும் சிறுவனிடம், ஷர்மிளாவை திரும்ப திரும்ப அதையேதான் கூறியுள்ளார். வேறு ஒருவருடன் திருமணம் செய்துகொள்ளப்போவதை ஏற்காத மாணவன் அழுது புலம்பியுள்ளார். ஆனால் ஷர்மிளா தன் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

இதையடுத்து வீட்டிற்கு வந்த மாணவன், ஷர்மிளாவை பிரிய மனமில்லாமல் மன விரக்தியுடன் இருந்துள்ளார். வேதனையை அடக்க முடியாமல் தவித்த மாணவன் தன்னுடைய படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதன் பிறகு போலீசார் விசாரணை செய்த போது, சிறுவனின் செல்போனில் அந்தரங்க ஆடியோ இருப்பதும், ஷர்மிளாவுடன் நெருக்கமாக இருந்த போட்டோ சிதறிக்கிடந்தன. ஷர்மிளாவிடம் விரித்ததில் உண்மை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் ஷர்மிளாவை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். நிச்சயதார்த்தம் முடிந்த ஷர்மிளா தற்போது சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 587

    1

    0