தடுப்பணையில் குளிக்க சென்ற +2 மாணவர்கள்.. நீச்சல் தெரியாமல் தத்தளித்த 3 பேர்.. இறுதியில் சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2024, 7:41 pm

தடுப்பணையில் குளிக்க சென்ற +2 மாணவர்கள்.. நீச்சல் தெரியாமல் தத்தளித்த 3 பேர்.. இறுதியில் சோகம்!!

கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணியில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, காருண்யா நகர் காவல் நிலைய சரகம் பெருமாள் கோவில்பதி கிராமம் முண்டாந்துறை ஆறு தடுப்பணையில் குளிப்பதற்காக பச்சாபாளையம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த தீத்திபாளையம் அரசு மேல் நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 1)பிரவீன் 2) கவின் 3) தக்க்ஷன் மற்றும் சஞ்சய் ஆகிய 4 பேரும் சென்று குளித்து உள்ளனர்.

மேலும் படிக்க: இந்திரா காந்தி கொடுத்த நகை.. அவரு மட்டுமல்ல : வயநாட்டில் BJP அண்ணாமலை சொன்ன விஷயம்!

40 அடி ஆழம் உள்ள தடுப்பணையில் தற்போது 15 அடி நீர் உள்ளது.
இதில் நீச்சல் தெரியாமல் பிரவீன், கவின், தக்ஷன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி இறந்து உள்ளனர்.

இது குறித்து காருண்யா நகர் காவல் துறை மற்றும் தீயணைப்பு, மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காருண்யா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 302

    0

    0