+2 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி தனிமையில் சந்தித்த உறவினர்… கர்ப்பமானதால் விபரீதம்!!
Author: Udayachandran RadhaKrishnan16 October 2023, 9:54 am
+2 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி தனிமையில் சந்தித்த உறவினர்… கர்ப்பமானதால் விபரீதம்!!
ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த வேப்பஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 39). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சசிகுமார் வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அப்போது உறவினர் மகளான பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் மாணவி கர்ப்பமாகி உள்ளார். மாணவி கர்ப்பமான விஷயம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகிலுள்ள பொன்னை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் அளித்தார்
புகாரின் பேரில் பொன்னை காவல் ஆய்வாளர் ரமேஷ் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்