‘எங்களை காத்த தெய்வமே போயிட்டு வா ஆத்தா’… முத்தம் கொடுத்து ரூ.2000 நோட்டுக்கு பிரியாவிடை கொடுத்த வரிச்சியூர் செல்வம்..!!

Author: Babu Lakshmanan
23 May 2023, 12:38 pm

திரும்பப் பெறப்பட்ட 2 ஆயிரம் நோட்டுகளுக்கு முத்தம் கொடுத்து பிரியாவிடை அளித்த முன்னாள் ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

இந்தியா முழுவதிலும் 2ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ஆர்பிஐ அறிவித்தது. இது தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகி பொதுமக்களிடையே பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த முன்னாள் ரவுடியான வரிச்சியூர் செல்வம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கையில் வைத்துகொண்டு 2 ஆயிரம் ரூபாய் குறித்து பேசும் வீடியோ வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வீடியோவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு முகர்ந்து பார்த்து பேசியுள்ள வரிச்சியூர் செல்வம், “இனி எப்போ பார்க்க போக்க போறேனோ.. அடுத்து 2 ஆயிரம் தாள போட்டா சொல்லிட்டு போடுங்கப்பா சாமிகளே. ஆத்தா எங்களை காக்கும் தெய்வம் நீ, எங்கள விட்டு நீ போற போயிட்டு வா,” என கூறி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 427

    0

    0