அலட்சியத்தால ஒரு உயிர் போயிடுச்சே.. 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

Author: Vignesh
26 August 2024, 5:51 pm

திருப்பூர் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் நவீன்குமார்( 19 ). திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் நேற்று இரவு 7 மணி அளவில் ஊத்துக்குளியில் இருந்து படியூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது இரட்டைக்கிணறு பகுதி அருகே டீ கடையில் நின்று கொண்டிருந்த ரமேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து எதிர் திசையில் இயக்கியுள்ளார்.

அப்போது, எதிரே வந்த நவீன்குமார், ரமேஷ் ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில், நவீன் குமார் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார்.

இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 210

    0

    0