வாக்களிக்க வந்த இரண்டு பேர் மயங்கி விழுந்து பலி… வாக்குச்சாவடியில் பரபரப்பு ; விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்..!!!
Author: Babu Lakshmanan19 April 2024, 2:23 pm
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிச்சாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதே போல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்கு வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: #GunFire வாக்குப்பதிவின் போது துப்பாக்கிச்சூடு : அலறி ஓடிய வாக்காளர்கள்.. மர்மநபர்களால் பதற்றம்.!!!
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளரிடம் தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.