2 வருட அனுபவம்.. சென்னைக்கு ஓடி உதவிய கோவை மாநகராட்சி ஆணையர் : நீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்கள் அனுப்பி வைப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2023, 2:22 pm

2 வருட அனுபவம்.. சென்னைக்கு ஓடிய உதவிய கோவை மாநகராட்சி ஆணையர் : நீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்கள் அனுப்பி வைப்பு!

சென்னை தெருக்களை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற கோவையிலிருந்து 41.எச்.பி. திறன் கொண்ட மோட்டார்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
குறிப்பாக தனியார் நிறுவனங்களிடம் இருந்து முதற்கட்டமாக நேற்று 41.எச்.பி. திறன் கொண்ட ஆறு ராட்சத மோட்டார்கள் மற்றும் 10 சிறு மோட்டார்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் கூடுதல் மோட்டார்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனவும் இந்த ராட்சச மோட்டார்கள் 32 கிலோ வாட் திறனுடன் வேகமாக தண்ணீரை வெளியேற்றும் உடையவை.

இந்த ஆறு மோட்டார்கள் ஏற்றுமதிக்காக தயாராக இருந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளரின் நடவடிக்கையால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கடந்த இரண்டு வருடங்களாக சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராகவும் பணிபுரிந்துள்ளதாலும் மழை நீர் வடிகால் வெள்ளம் தடுப்பு மீட்பு பணிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு அனுபவம் உள்ள காரணத்தினால் நேற்று மதியம் சென்னைக்கு விரைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 439

    0

    0