மதம் மாறச் சொல்லி 2 வருஷமா கொடுமை…!! மாணவியின் சித்தி பகீர் தகவல்…!!!

Author: kavin kumar
21 January 2022, 10:43 pm

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்திய 2 பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என பெண்ணின் உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பள்ளி விடுதியில் படித்த மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்தார். இவரை மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகார் தொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் சித்தி சரண்யா ஆகியோரிடம் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் வைத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியே வந்த மாணவியின் சித்தி சரண்யா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;- எனது மகளை மதமாற்றம் செய்ய கடந்த 2 ஆண்டுகளாக வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால் அவள் மனதுக்குள் காயப்பட்டு வந்துள்ளார். மேலும் விடுதியில் கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லியும், பாத்திரங்கள் கழுவ சொல்லியும் தொந்தரவு செய்து வந்துள்ளனர். தொடர்ந்து மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் அவள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவளை மதமாற்றம் செய்ய வற்புறுத்திய 2 பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம். பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கே இந்த நிலை என்றால் மற்ற மாணவிகள் நிலை என்னவாகும். எங்கள் மகளின் சாவுக்கு நியாயம் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 10359

    0

    0