ஆள் இல்லாத கால்நடை மருந்தகம்… நாய் உணவை அபேஷ் செய்த வாலிபர்கள்… வெளியான சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
17 September 2022, 3:44 pm

தூத்துக்குடி ; திருச்செந்தூர் அருகே கால்நடை மருந்தகத்தில் ஆள் இல்லாத நேரத்தில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து மருந்து திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடி தேரியூர் பகுதியில் ஆறுமுகராஜ் என்பவருக்கு சொந்தமான கால்நடை மருந்தகம் உள்ளது. சம்பவத்தன்று ஆறுமுகராஜ் மருந்தகத்தில் கண்ணாடியிலான கதவை வெளியே பூட்டிக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மருந்தகத்தில் ஆளில்லாததை நோட்டமிட்ட அவர்கள் கடையின் முன்பு இருந்த ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கால்நடை உணவான கேனான் புட் நாய் என்ற நாய் உணவை திருடி சென்றுள்ளனர். திரும்பி வந்து ஆறுமுகராஜ் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது இரண்டு நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

திருடி சென்ற நபர்கள் அது கால்நடை உணவுதான் என்று திருடினார்களா..? இல்லை வேறு ஏதும் உணவு பொருட்கள் என்று திருடி விட்டார்களா என தெரியவில்லை..? தொடர்ந்து இதுகுறித்து ஆறுமுகராஜ் காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ