200ML ஆவின் பால் பாக்கெட் விலை திடீர் உயர்வு… இனி ஆரஞ்சு நிறத்திற்கு பதிலாக வயலட் நிற பாக்கெட் ; ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
16 November 2023, 12:03 pm

200 ml ஆவின் பால் விலை திடீர் உயர்வு. 200 mlக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டு, வழக்கமாக ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் 200 ML ஆவின்பால் இன்று முதல் வயலட் நிற பாக்கெட்டுகளில் விற்பனைக்காக வந்துள்ளது.

தமிழக மக்களுக்குப் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பால் கொழுப்புச் சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:- ஆவின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வரும் COW Milk ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் 15 -11-2023 முதல் நிறுத்தம் செய்யப்பட்டு 16 ஆம் தேதி முதல் ஆவின் டிலைட் என்னும் பெயரில் வைலட் நிற பாக்கெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 200 மில்லி பாக்கெட் விற்பனை விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் காலை முதல் ஆவின் டிலைட் 200 ml பாக்கெட் பால் விற்பனைக்கு வந்துள்ளது. 200ml ஆரஞ்சு நிற பாக்கெட்டாக இருந்தபோது ₹9.50 விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதிய பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டு ரூபாய் 10 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென 200ml பால் பாக்கெட்டுக்கு 50 பைசா உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…