2024 தேர்தல் வியூகம்… அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2023, 10:28 am

அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ஆகஸ்ட் 20-ல் மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக மதுரை மாநாட்டு குழுவுடன் காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மதுரை மாநாட்டிற்கான ஏற்பாடுகள், அங்கு நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூலை 5ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பணிகள், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!