புத்தாண்டை சிறப்பாக கொண்டாடும் தங்கம்.. மக்களுக்கு அதிர்ச்சி!
Author: Hariharasudhan1 January 2025, 10:27 am
சென்னையில் இன்று (ஜன.01) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: அனைவருக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் எனக் கூறிக்கொண்டு, தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. 2024ஆம் ஆண்டின் முடிவில் குறைந்த தங்கம் விலை, புத்தாண்டை வரவேற்கும் விதமாக குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது. இருப்பினும், இது அடுத்தடுத்து படிப்படியாக குறைந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, இன்று (ஜன.01) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: விடாமுயற்சி ட்ராப்? படம் தள்ளிப்போனதற்கு இதுதான் காரணம்!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 796 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.