விஜய் போட்டியிடும் தொகுதி இதுதானா? தவெக சார்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2024, 2:48 pm

தர்மபுரியில் இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தர்மபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா தலைமையில் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கறிஞர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 TVK Leader Vijay contest Constituency Announced

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சித் துண்டுகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் நிர்வாகிகளிடையே தர்மபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா பேசும் பொழுது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழக வெற்றிக் கலகத்தின் சார்பில் கட்சித் தலைவர் விஜய் போட்டியிடுவார் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார் .

இதையும் படியுங்க: துணை முதலமைச்சரை பார்க்க நிர்வாணமாக சென்ற பெண் அகோரி.. திகைத்து நின்ற தொண்டர்கள்!

இந்த அறிவிப்பானது கட்சியினர் பெரும் கரகோஷத்துடன் கைத்தட்டி வரவேற்றனர். இந்த அறிவிப்பானது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மற்ற கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 TVK Vijay contest Constituency Announced

மற்ற கட்சி நிர்வாகிகளும் அனைவரும் தற்பொழுது தர்மபுரி மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தை கூர்ந்து கவனிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 134

    0

    0