விரிவடையும் த.வெ.க… 2026 தான் இலக்கு.. விஜய் கட்சி வெற்றி பெறும் : புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 ஜூன் 2024, 3:22 மணி
Pussy
Quick Share

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழகத்திலேயே முதல் முதலாக மாவட்ட அலுவலகம் புதுக்கோட்டை தான் திறக்கப்படுகிறது அலுவலகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் புசி ஆனந்த் திறந்து வைத்தார்

இதன் பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர் நடிகர் விஜயின் கட்டளையை நிறைவேற்ற தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும் முதலில் தொழில் நடத்தி சம்பாதிக்க வேண்டும் அதன் பின்னர் குடும்பத்தை கவனிக்க வேண்டும் அதற்கு அடுத்தபடியாக சம்பாதித்த காசில் ஒரு சதவீதமோ இரண்டு சதவீதமோ பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் நடிகர் விஜயின் கட்டளை அதை ஒவ்வொரு தொண்டனும் நிறைவேற்ற வேண்டும்

நடிகர் விஜய் கூறியவாறு 2026 தான் நமது இலக்கு 2026 இல் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும் அதற்கு ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும். நாம் யாரையும் விமர்சனம் செய்து பேச வேண்டாம் நம்மளுடைய மக்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்

பொதுமக்கள் பிரச்சனையில் முன்னுரிமை கொடுத்து அவருடைய பிரச்சனையை தீர்ப்பதற்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார் இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த்

நடிகர் விஜய் கூறியவாறு நாங்கள் மக்கள் பணி செய்து வருகிறோம்.
நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி சேருவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் எதுவாக இருந்தாலும் எங்களுடைய தலைவர் நடிகர் விஜய் தான் இது குறித்து அறிவிப்பார்

தேர்தல் ஆணையம் மாநில கட்சியாக தமிழக வெற்றி கழகத்தை அங்கீகரிப்பதற்கு நோட்டிபிகேஷன் கொடுத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் நாங்கள் கொடுத்துள்ளோம் அதன்படி தேர்தல் ஆணையம் நோட்டிபிகேஷன் கொடுத்துள்ளது விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆகியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் இது குறித்து தலைவர் பதிலளிப்பார்

தமிழக தேர்தல் நடப்பதற்கு இன்னமும் இரண்டு வருட காலம் உள்ளது ரொம்பவும் அவசரப்பட வேண்டாம். தமிழக வெற்றி கழகம் மக்களோடு இணைந்து மக்கள் பணியாற்றி வருகிறது

அடுத்ததாக நாமக்கல்லில் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட உள்ளது
தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கூட்டம் வரும் 18ஆம் தேதி நடப்பதால் மாநில நிர்வாகிகள் அன்று அறிவிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர் நாங்கள் எப்போதும் 18ஆம் தேதி கூட்டம் என்று கூறவில்லை இது எப்படி செய்து வெளியானது என்று தெரியவில்லை அப்படி ஒரு கூட்டம் பதினெட்டாம் தேதி நடப்பதாகவே இல்லை

உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் 2026 ஆம் ஆண்டு தான் எங்களுடைய இலக்கு என்று ஏற்கனவே தலைவர் விஜய் அறிவித்து விட்டார் இதனால் இந்த கேள்வி எழுவதற்கு வாய்ப்பு இல்லை

  • Sex Death ஹோட்டலில் ஆண் நண்பருடன் உல்லாசம்.. உடலுறவுக்கு பின் உயிரிழந்த இளம்பெண் : ஷாக் சம்பவம்!
  • Views: - 255

    0

    0