கோவையில் மெகா சூதாட்டம்…லட்சக்கணக்கில் புழங்கிய பணம்: 21 பேர் கைது…ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!!

Author: Rajesh
13 March 2022, 2:26 pm

கோவை: கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை சூலூர் போலீசாருக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் மெகா சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர், விசாரணையில் அவர்கள் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட மயிலேரிபாளையம் பகுதியை சேர்ந்த கதிர் (வயது 23), திருப்பூர் சேர்ந்த சரவணன் (32), செல்வபுரம் பகுதியை சேர்ந்த ராமு (47), கோவை காந்திபுரத்தை சேர்ந்த சுரேஷ்பாபு (48) உள்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து சீட்டுக் கட்டுகள் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ. 1 லட்சத்து 8 ஆயிரத்து 200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோன்று நெகமம் போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இட்டேரி காளியப்பன் பாளையம் பகுதியில் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 3,710யை பறிமுதல் செய்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ