ஒரே நாளில் ஒரே கோவிலில் 21 திருமணங்கள்.. முகூர்த்த நாளை முன்னிட்டு களைகட்டிய கூட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2024, 11:59 am

ஒரே நாளில் ஒரே கோவிலில் 21 திருமணங்கள்.. முகூர்த்த நாளை முன்னிட்டு களைகட்டிய கூட்டம்!

தூத்துக்குடி வைகாசி மாத சுப முகூர்த்த தினம் என்பதால் பாகம்பிரியாள் உடனுரை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் 21 திருமணங்கள் நடைபெற்றதால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

இன்று வைகாசி மாத வளர்பிறை சுப முகூர்த்த தினம் என்பதால் அதிக அளவு திருமணங்கள் நடைபெற்றது.தூத்துக்குடியில் பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள முருகன் சன்னிதானத்தில் இன்று 21 திருமணங்கள் நடைபெற்றது. சுப முகூர்த்த நேரம் ஆன காலை 6 மணி முதல் தொடர்ந்து திருமணங்கள் நடைபெற்றன.

மேலும் படிக்க: முதலிடத்தில் இந்தியா.. காரணம் பிரதமர் மோடி ; திமுக அமைச்சர் இப்படி சொல்லிட்டாரே..!!

இதன் காரணமாக கோவில் வளாகம் முழுவதும் புதுமண ஜோடிகள் மற்றும் அவரது உறவினர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க புதுமண ஜோடிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

  • ajith kumar next movie directed by sukumar அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?